// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த காதல் ஜோடி

உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த காதல் ஜோடி

 திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலா என்கிற அனீஸ் பாத்திமா என்பவர் அவரது காதல் கணவன் ஜமீல் அகமது என்பவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கருணாநிதி என்பவரின் மகள் அகிலா இவர் திருச்சியை சேர்ந்த இஸ்லாமிய வாலிபர் ஜமீல் அகமது என்பவரை காதலித்து வந்துள்ளார் இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது இந்நிலையில் அகிலாவின் தந்தை கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் அகிலாவை மற்றும் அவரது காதலன் ஜமீல் அகமது ஆகியோரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்..


மேலும் அகிலாவிற்கு வேறு ஒரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து அவரை வீட்டில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டிலிருந்து தப்பிய  அகிலா 29ஆம் தேதி இஸ்லாமியராக மதம் மாறினார் அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படி வாலிபர் ஜமீல் அகமதை திருமணம் செய்து கொண்டார்.



 இந்நிலையில் இந்த திருமணம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் வீட்டார் அகிலா என்கிற அனீஸ் பாத்திமா மற்றும் அவரது காதல் கணவர் ஜமீல் அகமது ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். 


இதனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.  இந்நிலையில் திமுகவின் அரசியல் பின்புலம் கொண்ட பெண்ணின் தந்தை கருணாநிதி பல்வேறு வகைகளில் அழுத்தங்கள் கொடுத்ததால்  அகிலா என்கிற அனீஸ் பாத்திமா அவரது காதல் கணவன் ஜமீல் அகமத் ஆகியோர் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர் .

Post a Comment

0 Comments