திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் 6 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதில் திமுக தில்லைநகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான கொடாப்பு நாகராஜ் கலந்து கொண்டு பொது மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.
மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக கலை இலக்கியப் பிரிவு மாநகர துணை அமைப்பாளர் கமல், சந்திர சேகர், RNR பிரதர்ஸ் மற்றும் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.
0 Comments