NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சி தேசியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தேசிய பயிலரங்கம்

திருச்சி தேசியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தேசிய பயிலரங்கம்

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தேசிய அளவிலான பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை ஏற்றுப் பயிலரங்கினைத் தொடங்கி வைத்தார். EXCEL குழுமங்களின் நிறுவனர் மற்றும் ரோட்டரி ஆளுநர் திரு முருகானந்தம்  இந்த பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச்  சிறப்புரை நல்கினார். 


இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையினை அதிகமாகக் கைக் கொள்ள வேண்டும் என்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றும் உரை நிகழ்த்தினார். 

காமராசர் , கலாம் போன்ற நாட்டைத் தலைநிமிர்த்திய அத்தனை தலைவர்களும் எண்ணத்தை வலிமையாக்கி வாழ்க்கையை வசப்படுத்திக் கொண்டதால் தான் வரலாறு அவர்களை என்றென்றும் முன்னிறுத்துகிறது என்றும் மாணவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதிலும் தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதிலும் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வலிமையான பாரதத்தைப் படைக்க முடியும் என்றும் தன் சிறப்புரையில் பதிவு செய்தார். பெற்ற தாய் தந்தையரை மதித்து நடத்தல் சமூகத்தில் தனக்கென்று தனி அடையாளத்தை பதித்து நடப்பதற்கு ஒவ்வொரு நிலையிலும் தம்மை வலிமையானவர்களாக  நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அதற்கு நாட்டு நலப்பணி திட்டம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்றும் மிகச் சிறப்பாக சிறப்புரை நல்கினார். கல்லூரியின்  துணை முதல்வர் முனைவர் நந்தகோபால் அவர்கள் வாழ்த்துரை நல்கினார். துணை முதல்வர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி அவர்கள் இப்பயிலரங்கின் நோக்க உரையினை நிகழ்த்தினார். இளம் தலைமுறையினர் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு நாட்டு நலப்பணி திட்டம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்பதை தம் நோக்க உரையில் பதிவு செய்தார். தொடக்க உரை நிறைவடைந்த பிறகு புகழ்பெற்ற மருத்துவர் திரு தர்மேஷ், துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் ப்ரொபைலர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு .ஆஷிக் ரகுமான் ஆகியோர் பல்வேறு அமர்வுகளாக நாட்டு நலப்பணி  திட்டத்தின் செயல்பாடுகளை நாட்டு நலப்பணி திட்டத்தின் மாணவத் தொண்டர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்ப பயிலரங்கில் பங்கேற்று சிறப்பித்தனர். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்  சௌந்தர்யா வரவேற்புரை வழங்கினார். நிறைவாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் ச. கருத்தான் நன்றியுரை நல்கினார்


நிருபர் - ரூபன் 

Post a Comment

0 Comments