NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

10 வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டி  மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ்,  ஸ்கேடிங் ஜிக்ஜாக்,  ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங் ஹர்டில்ஸ் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 


இதில் தமிழகத்தில் இருந்து 10,14,18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள்  பிரிவினர் மற்றும் சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவினர் என 90 க்கும் அதிகமான ஸ்கேடிங் விளையாட்டு வீரர், வீராங்கனைகள்  கலந்து கொண்டனர்.


மேலும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம் என பத்துக்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 500 க்கும் அதிகமான விளையாட்டு வீரர்,  வீராங்கனைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தை பிடித்து தங்க கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 


தேசிய அளவில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய வீரர்,  வீராங்கனைகளுக்கு திருச்சியில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வீரர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு பூங்கொத்து வழங்கி வீரர், வீராங்கனைகளை வரவேற்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த சாதனையை நிகழ்த்தியதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்க தலைவர் ராகேஷ் சுப்ரமணியன்,செயலாளர் பிரவீன் ஜான்சன், பொருளாளர்  தங்கமுருகன் மற்றும் பயிற்சியாளர்கள் அமல் ஜோயல், வினோத் ஆகியோரை வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.

Post a Comment

0 Comments