NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திருச்சியில் எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் சார்பில் "சொல் தமிழா சொல் - 2025" நிகழ்ச்சி - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

திருச்சியில் எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் சார்பில் "சொல் தமிழா சொல் - 2025" நிகழ்ச்சி - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர்  பாரிவேந்தரால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பேராயம் தலைசிறந்த எண்ணற்ற தமிழ் பணிகளை ஆற்றி வருகிறது. தமிழ் அருட்சுனைஞர் சான்றிதழ் படிப்பு, வள்ளலார் சான்றிதழ் படிப்பு முதலானவற்றோடு பல இலட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகள் வழங்குதல், அரிய நூல்களை வெளியிடுதல், பன்னாட்டு, தேசிய மாநாடுகளை ஒருங்கிணைத்தல் என பல்வேறு சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது. 


தமிழ்ப்பேராயம் வழி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பல ஆயிரம் மாணவர்களைக் கொண்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.அரும்பணிகள் பல ஆற்றிவரும் தமிழ்ப்பேராயம் இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சாற்றலை அங்கீகரிக்கும் நோக்கத்தில் "சொல் தமிழா சொல் - 2025" என்னும் தலைப்பில் மிகப் பிரம்மாண்டமான பேச்சுப்போட்டியை தற்போது ஏற்பாடு செய்துள்ளது. 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கி 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இப்பேச்சுப்போட்டி பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4-வது மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நேற்று (பிப்.16) நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 6 நடுவர்கள் கலந்து கொண்டனர். 

இதில் முதலிடம் பிடித்த அரியலூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மாணவி வைஜெயந்திக்கு ஒரு லட்சம் ரூபாயும், 2 ஆம் இடம் பிடித்த திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர் ஆஷிக் டோனிக்கு 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த கரூர் குமாரசுவாமி கல்லூரி மாணவர் கிஷோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. 

வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் பேராயம் தலைவர் கரு.நாகராசன் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார். வெற்றியாளர்களில் முதல் நால்வர் மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் வென்றோருக்கான பரிசுத்தொகை மாநில அளவிலான இறுதிப்போட்டி அன்று வழங்கப்படும்.

Post a Comment

0 Comments