NEWS UPDATE *** தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது ************** “பாஜக – அதிமுக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி… மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்! *** எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட வர்த்தகர் அணி  மாவட்ட செயற்குழு கூட்டம் வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் DR.S.பக்ருதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.வர்த்தகர் அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வர்த்தகர் அணி  மாநில செயற்குழு உறுப்பினர் MAJ.சாதிக் பாஷா மற்றும்  எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட துணை தலைவரும் வர்த்தகர்  அணியின் பொறுப்பாளருமான தளபதி அப்பாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு வர்த்தகர் அணியின் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்கள்.

வருகின்ற 18-ஆம் தேதி திருச்சி மாவட்ட வர்த்தக அணி சார்பாக  இப்தார் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பது  வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் அம்சா கலந்து கொள்கிறார்கள் மற்றும் திருச்சியில் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இறுதியாக வர்த்தகர் அணி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம்  அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

Post a Comment

0 Comments