NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சியில் காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமிழர் விடுதலை களம் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சியில் காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமிழர் விடுதலை களம் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சியில்  காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமிழர் விடுதலை களம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி - அனுமதி மறுத்ததால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்


திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் உள்ளவர்கள் மீது ஸ்ரீரங்கம் காவல்துறை அதிகாரி பொய் வழக்கு போடுவதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழர் விடுதலை களம் அமைப்பினர் மாவட்ட செயலாளர் சங்கர்,  பொதுநல வழக்கு பிரிவு மைய நிறுவனர் வழக்கறிஞர் வேங்கை ராஜா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டனர்.


ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து  ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி சந்தித்து மனு அளித்தனர்.தொடர்ந்து செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் வேங்கை ராஜா கூறுகையில்...

டந்த ஆண்டு 7 மாதம் அன்று மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திருவளர்ச்சோலை கீழத்தெருவைச் சேர்ந்த 2 பேரை கொலை செய்ததை கண்டித்தும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் குரு உள்ளிட்ட சாட்சி சொன்ன நபர்களின் வீடுகளுக்கு ஸ்ரீரங்கம் காவல்துறை அதிகாரி முகாந்திரம் இல்லாமல் அத்துமீறி சென்று பொய் வழக்கு போடுவதாக  மிரட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்தோம். காவல்துறை அனுமதி மறுத்ததால் கலெக்டர் சந்தித்து மனு கொடுக்கச் சென்றோம் அவர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு வழங்கினோம். நடைபெற்ற செய்திகளை கேட்டு அறிந்த அவர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் என கூறினார்.


இதில் தமிழர் விடுதலை களம் அமைப்பின் நிர்வாகிகள் சங்கர்குரு, ஆகாஷ், புகழ், ராமு,  வழக்கறிஞர்கள்  தனசேகர் மற்றும் கிராம பகுதி பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments