காரைக்கால் பைந்தமிழ்ப் பேரவை மற்றும் Dr.AIMSS NEET கல்வி அகாடமி காரைக்கால் இணைந்து சமய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் இதிரிஸ் மரைக்காயர் கிராஅத் ஓதினார், கலைமாமணி, அல் ஹாஜி. E. குல் முஹம்மது அவர்கள் இஸ்லாமிய கீதம் பாடினார். Dr.AIMSS NEET கல்வி அகாடமியின் நிறுவனர் சரவணன் மொழி வாழ்த்து மற்றும் இஸ்லாமிய கீதம் பாடினார்.
பைந்தமிழ்ப் பேரவையின் பொதுத் தொடர்பு பொறுப்பாளர் ஹாஜி, S. M. முஹம்மது ஆரிஃப் மரைக்காயர் வரவேற்புரையாற்றினார். பைந்தமிழ் பேரவையின் தலைவர் கவிஞர்.கோ. ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.
பத்மஸ்ரீ, கலைமாமணி கி. கேசவ சாமி அவர்கள் முன்னிலை வகித்தும் வாழ்த்தினார்.
பைந்தமிழ் பேரவையின் பொதுச் செயலாளர் கவிஞர்,க. பார்த்திபன் அவர்கள் துவக்கவுரை வழங்கினார், கலைமாமணி பேராசிரியர் ஹாஜி.மு.சாயபு மரைக்காயர் அவர்கள் மறைவட்ட பங்குதந்தை,புனித தேற்றரவு அன்னை தேவாலயம், காரைக்கால், அருள்,முனைவர்.P.பால்ராஜ்குமார் அவர்கள் தமிழ்மாமணி, பேராசிரியர் ஹாஜியா.சா.நசீமா பானு ஆகியோர் ரமலான் சிறப்பு உரை வழங்கினார். இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அரசு சமாதான கமிட்டி உறுப்பினர் திருநிறைச்செல்வர்.K. தண்டாயுதனபாணி பக்தர், மௌலவி ஹாபிஸ் A.ரஹமத்துல்லாஹ் ஜைனி பேஷ் இமாம்,அப்துல் நஜிர், IUML(பாண்டிச்சேரி மாநில பொதுச் செயலாளர்),
சுல்தான் கபீர் (ஜாஹிர்) IUMĻகாரைக்கால் மாவட்ட செயலாளர், M.ஜெகபர் சாதிக் (சேத்தான்) IUML காரைக்கால் மாவட்ட இளைஞர் அணி தலைவர், M. குவாஜா கரிம் (பொருளாளர்) காரைக்கால் மாவட்ட பயன்பாட்டு வாகன விற்பனையாளர்கள் நலச்சங்கம், M.முஹம்மது தாஹா மரைக்காயர். சட்ட சேவை தன்னார்வலர் (நாகை மாவட்டம்) , A.M.H.N. நுக்மான், கார்குழலி, சாந்தி ஜுவல்லரி உரிமையாளர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பைந்தமிழ் பேரவை சார்ந்த இணை நிறுவனர்,முனைவர் வாசுகி ஜெயராமன், துணைத் தலைவர் தங்கபால்ராஜ், DIS (Zone 2), பொருளாளர், ஆசிரியர் ஜெ.செழியன்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் A. அருள்பிரகாஷ், சண்முகம் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் J. கனகசேகரன் ,
பைந்தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் கலைமாமணி, P. புஷ்பராஜ், V.ராஜேந்திரன் (நூலகர்), அனிதா பார்த்திபன், ஆசிரியர் S.மீனா, ஆசிரியர் P.நந்தினி பிரியா,செல்வி கலை குமரன், சு.விஜய், ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக செயற்குழு உறுப்பினர் M.சந்தானம் சாமி அவர்கள் நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் - முகமது ஆரிப் மரைக்காயர்
0 Comments