NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** SDPI கட்சி தேசிய தலைவர் ஃபைஸி விடுதலை செய்ய கோரி திருச்சியில் SDPI கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

SDPI கட்சி தேசிய தலைவர் ஃபைஸி விடுதலை செய்ய கோரி திருச்சியில் SDPI கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

SDPI கட்சியின் தேசிய தலைவர்  ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில்  SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் நியமத்துல்லா மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் ரஹீம், தளபதி. அப்பாஸ் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முபாரக் அலி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி கலந்துக் கொண்டு தேசிய தலைவரை விடுதலை செய்யக்கோரி கண்டன உரையாற்றினார். மேலும் திருச்சி ஜாகீர் கண்டன உரை ஆற்றினார். 


மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ்  ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.


இந்த கண்டன ஆர்பாட்டத்தில் SDTU  தொழிற்சங்க மாநில செயலாளர். முகம்மது ரபீக்,வடக்கு மாவட்ட தலைவர் ஜவகர் அலி, வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அலாவுதீன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் மதர். ஜமால் முகம்மது சதாம் உசேன்,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு) கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா, 

மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா., திருவெறும்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது, ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர்,மணப்பாறை தொகுதி செயலாளர் ஜின்னா ,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்கரை மீரான்



உள்ளிட்ட நிர்வாகிகள் , பொதுமக்களும் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்நிகழ்வை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் தொகுத்து வழங்கினார்கள்.இறுதியாக மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி நன்றி உரையாற்றினார்

Post a Comment

0 Comments