மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திருச்சி மாவட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் "நமது வக்ஃப் நமது உரிமை" என்ற முழக்கத்தோடு நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது .
திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் அழைப்பை ஏற்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, இந்திய தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கண்டன் உரை ஆற்றி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முக்கிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த சட்ட மசோதா வழிபாட்டு உரிமைகளுக்கும், தனி மனித உரிமைகளுக்கு எதிரானது எனவும்,
தமிழக சட்டப்பேரவையில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர் என உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
திருச்சி மாவட்ட, மாநகர, வட்டார, ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாக பெருமக்களுக்கும்,அழைப்பை ஏற்று வருகைதந்த அனைத்து மஸ்ஜித்&மத்ரஸா&தர்காக்களின் நிர்வாக பெருமக்களுக்கும், அனைத்து மஹல்லா ஜமாஅத்தார்களுக்கும்,இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
0 Comments