புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஹிலுரு பள்ளியின் முஸ்தபா கமால் வீதி நோக்கிய பாதை முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஹிளுருப்பள்ளி ஜாமியா மஸ்ஜித் ஜமாத்தார்களின் நீண்ட நாள் கோரிக்கையான பள்ளிவாசலில் நடைபாதை மற்றும் அங்குள்ள குளத்தை சுத்தம் செய்து புதுப்பித்து தருவது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் காரைக்கால் நகராட்சி மூலம் முதற்கட்ட பணி ரூபாய் 40,00,000/- மதிப்பீட்டில் வண்ணக் கற்களாலான நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்தது. இதனை இன்று இஸ்லாமியர்களின் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்குப் பிறகு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச் நாஜிம் அவர்கள் கல்வெட்டை திறந்தும் ரிப்பன் வெட்டியும் வண்ண கற்களாலான நடைபாதையை திறந்து வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பணியான குளம் தூர்வார்வாது மற்றும் குளத்தை சுற்றி நடைபாதைகள் அமைப்பதற்கு ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் உள்ள பணியை இன்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்தியபாலன், புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் Y. இஸ்மாயில், வக்ஃப் நிர்வாக சபையின் நிர்வாக அதிகாரி நூருல் ஹசன், அரசு காஜியார்கள் எஸ். கே. டி .ஆரிப் மரைக்காயர், துணை O. கப்பாப்பா, ஏ. பி. சுல்தான், சமாதான கமிட்டி உறுப்பினர் பஷீர், முன்னாள் வக்ஃப் நிர்வாக சபையின் முத்தவல்லிகள், சமூக ஆர்வலர் ஹாஜி முகம்மது ஆரிப் மரைக்காயர் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அனைத்து பள்ளி ஜமாத்தார்கள் கலந்த கொண்டனர்.
செய்தியாளர் : ஹாஜி முகம்மது ஆரிப் மரைக்காயர்
0 Comments