// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் சிறப்பு பூஜை, அன்னதானம், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர், பகுதி செயலாளர் பூபதி, வாசுதேவன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், பேரவை மாவட்ட இணை செயலாளர் பொன்னார், வழக்கறிஞர் இணை செயலாளர் கௌசல்யா, 

வட்ட செயலாளர் முருகன், கல்லுக்குழி ரமேஷ், தகவல் தொழில்நுட்பம் பிரிவு கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments