NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கோடை விடுமுறையில் நூலகத்தில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன

கோடை விடுமுறையில் நூலகத்தில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன

திருச்சி புத்தூர் கிளை நூலகம், வாசகர் வட்டம் சார்பில் கோடை விடுமுறையில் நூலகத்தில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார்.சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது  சுபேர், வரலாற்று ஆர்வலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், நூலகத்தில் புத்தகங்களைப் படிப்பது, புதிய விஷயங்களை அறிந்துகொள்வது, கல்வித் திறன்களை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. நூலகத்தில்  வரலாறு, அறிவியல், இலக்கியம், அறிவியல் புனைகதைகள், சுயசரிதை, வாழ்க்கை வரலாறு என பல நூல்கள் உள்ளன. 

நூலகத்தில் பிடித்தமான புத்தகங்களைத் தவிர,  புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் முடியும். ஒரு புதிய மொழி, புதிய கலை, அல்லது ஒரு புதிய தொழில் பற்றி அறியலாம்.  நூலகத்தில் பல்வேறு நூல்களைப் படிக்கும்போது, கற்பனைத்திறன் வளரும். இது  படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு உதவும். எனவே, கோடை விடுமுறையில் நூலகத்தில் நேரத்தை செலவிடுவதன் மூலம், மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், கல்வித் திறன்களை மேம்படுத்தவும், மனதளவில் புத்துணர்ச்சி பெறவும் முடியும் என்றார்.

Post a Comment

0 Comments