திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் குமரி முதல் இமயம் வரை சாலகிராம யாத்திரையாக பல்வேறு கோவில்களுக்கு சென்று மங்களாசாசனம் செய்து வருகிறார்
இந்த நிலையில் ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் உள்ள எந்த சுவாமிகளும் செய்யாத பயணமான நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஶ்ரீ மூர்த்தி பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் மேற்கொண்டார்
108 வைணவ திவ்ய தேசங்களில், நேபாள நாட்டின் முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஸ்ரீமூர்த்தி கோயில் 70-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது
நேபாளம் முக்திநாத் ஶ்ரீ மூர்த்தி பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்வது என்பது சிரமமான காரியம் இமயமலையில் முக்திநாத் பள்ளத்தாக்கில் 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த தலமாகும் அங்கு விமானம் மூலமாக தான் எளிதாக செல்ல முடியும் ஆனால் ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் மற்றும் அவரது சிஷ்யர்கள் சாலை மார்க்கமாக சென்று மூன்று நாட்கள் சாலகிராம யாத்திரையின் முக்திநாத்-ல் மூன்று நாட்கள் தங்கி மங்களாசாசனம் செய்து வந்தனர்
இன்று திருச்சி திருச்சி ஶ்ரீரங்கம் வந்த ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் ஶ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார்
0 Comments