// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் சிறப்பு பூஜை, அன்னதானம், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜசேகர், பகுதி செயலாளர் பூபதி, வாசுதேவன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், பேரவை மாவட்ட இணை செயலாளர் பொன்னார், வழக்கறிஞர் இணை செயலாளர் கௌசல்யா, 

வட்ட செயலாளர் முருகன், கல்லுக்குழி ரமேஷ், தகவல் தொழில்நுட்பம் பிரிவு கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments