மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக பிரிவான மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் அவசரம் மாவட்ட செயற்க்குழு கூட்டம் பாலக்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் எம்ஏ முகமது ராஜா ,வர்த்தக சங்க மாவட்ட தலைவர் கபீர் அஹமத் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி அவர்கள் தலைமையிலும்
வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அன்சாரி மாவட்ட பொருளாளர் மைதீன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் காசிம், இக்பால், நசீர், சீனி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சாலையோர சிறு வியாபாரிகளின் வியாபாரக் குழு கமிட்டி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஆலோசனைகள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments