// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி , தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்பு

மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி , தமிழக கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் திருச்சி ஷெரிப் மற்றும் அபிமானி திருச்சி ஷாரூக் அவர்களின் இல்ல திருமண நிகழ்வு மும்பையில் நேற்று நடைபெற்றது.

மணமகன் முஹமது சபீர் அவர்களுக்கும், மணமகள் முஸ்கான் ஷேக் அவர்களுக்கும் நடைபெற்ற வலிமா திருமண வரவேற்பில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


இந்நிகழ்வை முன்னிட்டு மும்பையின் பல்வேறு பகுதிகளை சார்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த பிரமுகர்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.


முதலாவதாக தமிழகத்திலிருந்து அழைப்பினை ஏற்று பல மைல்கள் கடந்து வாழ்த்த வந்தமைக்கு குடும்பத்தினர்கள் மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

விரைவில் மும்பை பெருநகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மும்பை மாநகர பணிகள் நிர்வாக ரீதியாக தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண நிகழ்வில் மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷெரீப், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் ஆத்தூர் ரஹிமான், இளைஞர் அணியின் மாநில பொருளாளர் இம்ரான், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தர்வேஷ், ரஷீத் மற்றும் மும்பையின் பிரபல வர்த்தக பிரமுகர்கள் ஹக்கீம், அப்துல் ஆகியோர் பங்கேற்றனர்

Post a Comment

0 Comments