// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** திருச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், அம்மா பேரவை இணை செயலாளர் முத்துகுமார் ஏற்பாட்டில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது

திருச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், அம்மா பேரவை இணை செயலாளர் முத்துகுமார் ஏற்பாட்டில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது

திருச்சி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற  23,24,25 ஆகிய தினங்களில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மரக்கடை எம்ஜிஆர் திடலில் அதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் மக்களை சந்தித்து சிறப்புரை ஆற்ற உள்ள பகுதியில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. 


மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ராட்சத பலூனை பறக்க விட்டார். இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியை அம்மா பேரவை இணைச் செயலாளர் L.முத்துகுமார் ஏற்பாடு செய்திருந்தார் 

Post a Comment

0 Comments