திருச்சி மாநகராட்சி வார்டு எண் 27,28 ஆகிய வார்டுகளுக்கான "உங்களுடன் ஸ்டாலின் திட்டம் " முகாம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.இந்த முகாமில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டச்சியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாமன்ற உறுப்பினர்கள் பைஸ் அகமது MC, கமால் முஸ்தபா MC, திமுக வட்ட செயலாளர் அம்ஜத், கர்ணா ஆகியோர் முகாமை முழுமையாக ஒருங்கிணைத்து மக்களின் அனைத்து மனுக்களையும் உரிய முறையில் பதிவு செய்து துறை அதிகாரிகளிடம் அளித்து அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க ஆவண செய்ய வலியுறுத்தினர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை, இலவச பட்டா, வீட்டு மனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சுமார் 2637 மனுக்கள் பதிவு செய்து உரிய துறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி மேற்கு வட்டாட்சியர், மண்டல 5 உதவி ஆணையர், உதவி செயற் பொறியாளர், மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் மேற்பார்வையில் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் என 250 பேர் இம் முகாமில் பணியாற்றினர்.
0 Comments