// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் நடைபெற்ற 69 ஆம் ஆண்டு திறனாய்வு போட்டியில் பதக்கம் பெற்ற திருச்சி மாவட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் நடைபெற்ற 69 ஆம் ஆண்டு திறனாய்வு போட்டியில் பதக்கம் பெற்ற திருச்சி மாவட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும்  காவலர்கள் தங்களது பணியில் திறம்பட செயல்படுவது தொடர்பாக ஆண்டுதோறும் நடைபெறும் திறனாய்வுப் போட்டியின் 69 ஆம் ஆண்டு காவல்துறை திறனாய்வு போட்டிகள் கடந்த 30-07-2025 ஆம் தேதி துவங்கி 04-08-2025 தேதி வரை சென்னை உனமாஞ்சேரியில்  உள்ள தமிழ்நாடு காவல்துறை உயர் பயிற்சி ரகத்தில் நடைபெற்றது.

மேலும் திறனாய்வு போட்டிகளில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக பங்கேற்று தடய அறிவியல் புலனாய்வு பிரிவில் திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய தனி பிரிவு காவலர் விஜயகுமார் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவில் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ராம்கி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சிறுகனூர் காவல் நிலைய தலைமை காவலர் முருகானந்தம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம்  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களிடம் பெற்றனர்.



மேற்படி மாநில அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டியில் பதக்கம் பெற்ற மூன்று காவலர்களின் திறமைகளை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் மற்றும் காவலர்களை ஊக்கப்படுத்தினார்

Post a Comment

0 Comments