திருச்சி குண்டூர் பகுதியில் உள்ள MIET பொறியியல் கல்லூரி ஆம் கல்வியாண்டில் 28வது முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் B.செல்வம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
MIET கல்வி நிறுவன தலைவர், Er A. முகமது யூனுஸ், அவர்கள் விழாத்தலைமையேற்று, சிறப்பு விருத்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். வளரும் புதிய பொறியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றலின் மதிப்பை வலியுறுத்தினார். MIET கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் எம்.ஒய். அப்துல் ஜலீல் அவர்கள், தனது சிறப்புரையில் மாணவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார், மேலும் இந்த நாள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்று நம்புவதாகவும் கூறினார். உலகம் வாய்ப்புகள் நிறைந்தது என்றும் சரியான வழிகாட்டுதல் அவர்களை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
MIET பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. நவீன் சேட் அவர்கள் வாழ்த்துறையில், மாணவர்கள் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க அறிவுறுத்தியதுடன், பல்வேறு துறைத் தலைவர்களை அறிமுகப்படுத்தி, கல்லூரி பற்றிய தகவல்களையும் விவரங்களையும் வழங்கினார். மாணவர்கள் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
விழாவின் தலைமை விருந்தினராக, HCL Tech மதுரையின் இணை துணைத் தலைவரும் மையத் தலைவருமான திரு. திருமுருகன் சுப்பராஜ் தனது சிறப்புரையில் மாணவர்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் திறனையும், நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதையும், கற்றல் குறித்த விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சமூகத்தின் தேவைக்கேற்ப மாணவர்கள் தங்கள் தொடர்புத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments