மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் (எ) பாபு தலைமையில், மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா, அவைத் தலைவர் ஷேக் தாவூத், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்வேஷ், ஷேக் அப்துல்லா, யாசர் ஷெரிப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் தர்வேஷ் அவர்கள் நிர்வாகிகளை வரவேற்று உரையாற்றினார்.கூட்டத்தின் நோக்கத்தை மாவட்ட செயலாளர் பாபு விளக்கினார்.,
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முஹமது ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் கருத்துரையாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
1. அதிவிரைவில் கண் சிகிச்சை முகாம் நடத்துவது.
2. பகுதி பொறுப்பாளர்களை நியமித்து பணிகளை முடுக்கி விடுவது.
3. மாவட்ட நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடத்துவது.போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
0 Comments