// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** கரிப் நவாஸ் அரபிக் கல்லூரி சார்பில் மீலாது மாநாடு மற்றும் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது

கரிப் நவாஸ் அரபிக் கல்லூரி சார்பில் மீலாது மாநாடு மற்றும் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீலாது மாநாடு மற்றும் கரிப் நவாஸ் அரபிக் கல்லூரியின்  நான்காம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவின் துவக்கத்தில் இறை வசனம் ஓதப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முஸ்லிம் ஜமாத் மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மான், புகாரிஅரபிக் கல்லூரி முதல்வர் அபூஹனீஃபல் ,மர்கஸீத்தஸ்கிய அரபிக் கல்லூரி பொதுச் செயலாளர், அப்துல் ஸலாம்,ஆகியோர் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறுகளை சிறப்பித்துக் கூறினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஜமால் முகமது கல்லூரி பொதுச் செயலாளர் எ கே காஜா நஜீமுதீன்,ஜமால் முகமது கல்லூரி முதல்வர்  ஜார்ஜ் அமலரத்தினம்,ஜமால் முகமது கல்லூரி பொருளாளர் ஜமால் முகமது,ஜமால் முகமது கல்லூரி துணை முதல்வர் ஜாகிர் உசேன்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் காயிதமில்லத் தொடக்கப் பள்ளி செயலாளர் அப்துல் ரஹ்மான் என்கின்ற அப்பாக்குட்டி, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பாபுமற்றும் மதரஸா நிர்வாகிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments