திருச்சி திருவானைக்கோவில் ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மேலாண்மை மற்றும் வங்கி மேலாண்மைத் துறை சார்பில்"கிராமப்புறங்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் தேசத்தை கட்டி எழுப்புதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இரண்டு நாள் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஶ்ரீ C.A.வெங்கடேஷ் வரவேற்புரை ஆற்றினார்.கருத்தரங்கின் அறிக்கையை கல்லூரி முதல்வர் முனைவர் M. பிச்சைமணி வழங்கினார்
இந்த கரு நிதி ஆலோசகரும் சுதேசி ஜாக்ரண் மஜ்சின் தேசியஒருங்கிணைப்பாளருமான சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்
சிறப்புரையில் தன்னிறைவு பெற்ற பொருளாதாரக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும் இளைஞர்கள் படைப்பாற்றல் மற்றும் தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டும் என பேசினார்.நிகழ்வின் நிறைவாக மேலாண்மை மற்றும் வங்கி மேலாண்மை டீன் சுபா நன்றிவுரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்
0 Comments