// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** கரிப் நவாஸ் அரபிக் கல்லூரி சார்பில் மீலாது மாநாடு மற்றும் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது

கரிப் நவாஸ் அரபிக் கல்லூரி சார்பில் மீலாது மாநாடு மற்றும் நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீலாது மாநாடு மற்றும் கரிப் நவாஸ் அரபிக் கல்லூரியின்  நான்காம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவின் துவக்கத்தில் இறை வசனம் ஓதப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முஸ்லிம் ஜமாத் மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மான், புகாரிஅரபிக் கல்லூரி முதல்வர் அபூஹனீஃபல் ,மர்கஸீத்தஸ்கிய அரபிக் கல்லூரி பொதுச் செயலாளர், அப்துல் ஸலாம்,ஆகியோர் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறுகளை சிறப்பித்துக் கூறினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஜமால் முகமது கல்லூரி பொதுச் செயலாளர் எ கே காஜா நஜீமுதீன்,ஜமால் முகமது கல்லூரி முதல்வர்  ஜார்ஜ் அமலரத்தினம்,ஜமால் முகமது கல்லூரி பொருளாளர் ஜமால் முகமது,ஜமால் முகமது கல்லூரி துணை முதல்வர் ஜாகிர் உசேன்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் காயிதமில்லத் தொடக்கப் பள்ளி செயலாளர் அப்துல் ரஹ்மான் என்கின்ற அப்பாக்குட்டி, மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பாபுமற்றும் மதரஸா நிர்வாகிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments