// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கம் மாநாடு முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கம் மாநாடு முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட மாநாடு சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்றது. 

மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமை தாங்கினார்..மாவட்ட துணை தலைவர் மேரி லூர்து ராணி வரவேற்றார். சிஐடியூ மாநகர், மாவட்ட செயலாளர் ரெகராஜன் தொடக்க உரை ஆற்றினார்.


மாவட்ட செயலாளர் சித்ரா வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ராணி வரவு செலவு தாக்கல் செய்தார்.மாநில தலைவர் ரத்தினா மாலா சிறப்புரை ஆற்றினார்.மாநாட்டில் மாவட்ட செயலாளர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் அல்போன்சா மேரி செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்



முடிவில் மாநில பொருளாளர் தேவமணி நிறைவுறை ஆற்றினார்.முடிவில் மாவட்ட இணை செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.


மாநாட்டில் அங்கன்வாடி ஊழியர் உதவியாளர்களை அரசு ஊழியராக்க  வேண்டும்.குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்ஷன் வழங்க வேண்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக் கொடையாக ஊழியருக்கு ரூபாய் பத்து லட்சமும், உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,மாநாட்டில் திருச்சி மாவட்டம் சார்பில் ரூபாய் 30 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments