பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் முழு நேரம் சான்றிதழ் படிப்பு, மற்றும் நான்கு ஆண்டுகள் பகுதி நேரம் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 14 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். நல்ல குரல் வளம் பெற்றிருக்க வேண்டும். இந்து சைவ சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
முழு நேரம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். பகுதி நேரம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
செயற்கைக்கான படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் https://samayapurammariamman.hrce.tn.gov.i/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு 04312670460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
0 Comments