// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை கழிவுகள்

திருச்சி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை கழிவுகள்

 திருச்சி மாநகராட்சி  51 வது வார்டு பகுதி பீமநகர் ஹிபர் ரோடு பகுதியில் மேம் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள  வகாப்  காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள தெருவில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.

சாக்கடை கழிவு வெளியேறி  சந்தின்  உள்புறம் உள்ள வீடுகளில் தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பொதுமக்கள் தொற்று நோய் ஏற்படும் அபாயம்‌ உள்ளது.இது தொடர்பாக அங்குள்ள பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும்  51 வது வார்டு மாமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித  பலனும் ஏற்படவில்லை.


இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடையில் உள்ள அடைப்பை நீக்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் 

Post a Comment

0 Comments