// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** போதைக்கு எதிராக விழிப்புணர்வு கைபந்து போட்டி கோப்பையை வழங்கிய மஜகவினர்

போதைக்கு எதிராக விழிப்புணர்வு கைபந்து போட்டி கோப்பையை வழங்கிய மஜகவினர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் MVC நண்பர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து " போதைக்கு எதிராக இளைய சமுதாயத்தை காப்போம் " எனும் உன்னதமிக்க தலைப்பை முன்னிறுத்தி நடத்திய கைப்பந்து போட்டியில் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் (எ) பாபு அவர்கள் தலைமையில்  மஜக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற வீரர்களுக்கு மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி M.முஹமது ஷரிப் அவர்கள் வெற்றிக் கோப்பை மற்றும் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார். 


முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற மாநில இளைஞர் அணி செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் உட்பட மஜக நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி விழாக் குழுவினர் சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் கூடுதலாக மஜக சார்பிலும் அணி களமிறக்கப்பட்டு, சிறப்பாக விளையாடி ஐந்தாவது பரிசினை மஜக அணி வென்றது.


இறுதியாக இந்நிகழ்விற்கு முழு ஆதரவு வழங்கிய மஜக விற்கும் தலைவர் மு.தமிமுன் அன்சாரி EX.MLA அவர்களுக்கும் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என்றென்றும் ஆதரவாக இருப்போம் என மகிழ்வோடு வாக்குறுதி அளித்தனர்.


இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் யாசர் ஷெரிப், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதாம் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் குட்டிப் புலி நியாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் ஜமீர், பகுதி செயலாளர் தோப்பு சதாம் உட்பட நிர்வாகிகள், திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


Post a Comment

0 Comments