// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துவரும் குடும்பத்தினர்க்கு 2025 ஆண்டு சாதனையாளர் விருது!

ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துவரும் குடும்பத்தினர்க்கு 2025 ஆண்டு சாதனையாளர் விருது!

திருச்சி முத்தையா உதவும் அறக்கட்டளை காவேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து 2025 ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா, முத்தையா உதவும் கரங்கள்  அறக்கட்டளை ஏழாம் ஆண்டு விழா, பசி இல்லா தமிழகம், பிடிஅரிசித் திட்டம் 2500 ஆவது நாள் முன்னெடுக்கும் விழா, நமது கிராமம் நமது பொறுப்பு மக்கள் நல இயக்க உறுப்பினர்கள் இணையும் விழா, தாய்மனம் தர்ம சாலை இலவச காப்பகம் நிதி திரட்டும் விழா என ஐம்பெரும் விழா  திருச்சி பெட்டவாய்த்தலை கே.ஆர்.ஆர். திருமண மஹாலில் நடைபெற்றது. முத்தையா உதவும் கரங்கள் அறக்கட்டளை இயக்குனர் தனபால் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,சிறுகமணி பேரூராட்சி மன்ற தலைவர் சிவகாமசுந்தரி ராஜலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர முரளி, சிறுகமணி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலைய ராஜபாபு, திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி உதவி பேராசிரியை செர்லின் ரோஸிட்டோ, தமிழ்நாடு சைக்கிள் சாம்பியன் சௌந்தர்ராஜன், ஆர்கானிக் ஃபார்மிங் பயிற்சியாளர் அக்ரி ராஜேந்திரன், புதுச்சேரி மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிவா என்டர்பிரைஸ் கம்பெனி லிமிடெட் சிவா, பெரிய வாய்க்கால் விவசாய சங்க பொருளாளர் மூர்த்தி,சாரதி கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலையில், குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் இல்லாத, ஆதரவற்ற நிலையில் இறந்துபோனவர்கள அனாதையாக அல்லது உரிமை கோரப்படாதப் பிணங்களை திருச்சி மாவட்டத்தில் மயானப் பூமியில் மனைவி வழக்கறிஞர் சித்ரா,  மகள் கீர்த்தனா விஜயகுமார் உடன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்து நல்அடக்கம் செய்து வருகின்றார்.இவர்களது தன்னலமற்ற மனிதாபிமான சேவையைப் பாராட்டி 2025 ஆண்டு சாதனையாளர் விருதினை முத்தையாவது கரங்கள் அறக்கட்டளை இயக்குனர் தனபால் வழங்கினார்.

Post a Comment

0 Comments