பெரம்பலூர் பொதிகை தமிழ் செம்மொழி பேரவை, புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீ மத்வ சபா கட்டிடவளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அரிமா வைகை மாலா துவக்க உரையாற்றினார். திருத்தவத்துறை தமிழ் சங்க தலைவர் தமிழ் சுடர்ச் செம்மல் உலகப் புவியரசு நோக்க உரையாற்றினார்.
தமிழ் மருத்துவர் கோஷிபா, திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் கோவிந்தசாமி, செயலர் ஜெயலட்சுமி, துணைத் தலைவர் லட்சுமி நந்தகுமார், செயற்குழு உறுப்பினர் கேசவன், அரிமா மாவட்ட தலைவர் முஹம்மது சபி,அனுதினம் டிரஸ்ட் முனைவர் அருணா தினகரன், அகிலம் வெல்வோம் அறக்கட்டளை சுமித்ரா தேவி மாதவன், புரட்சி பாவேந்தர் பேரவை முனைவர் சேனாபதி, கவிஞர் பரசுராமன், கவிதாசன், மோகன் குமார் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். ஆதரவற்ற உரிமை கோரப்படாத பிணங்களை மயான பூமியில் நல்லடக்கம் செய்து வரும் விழிம்பு நிலை மக்களின் சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மனிதநேயப் பணியைப் பாராட்டி
பத்மஸ்ரீ சுப்புராமன் முன்னிலையில், தமிழ்நாடு
மேனாள் அமைச்சர் நல்லுசாமி பொன்னாடை அணிவித்து இரண்டு ஆயிரம் ரூபாய் பொதிகை தமிழ் செம்மொழி பேரவை புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் பொற்கிழியினை வழங்கினார்.
ஆதரவற்ற உரிமை கோரப்படாத அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், ஆதரவற்ற
அனாதை பிணம் என்பது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரும் இல்லாத, ஆதரவற்ற நிலையில் இறக்கும் நபரின் உடலைக் குறிக்கிறது. இத்தகைய உடல்களை, சமூக சேவை செய்யும் தனிநபர்கள், குழுக்கள் காவல்துறையினருடன் இணைந்து மனிதநேயத்தின் அடிப்படையில் இறுதிச் சடங்குகளைச் செய்து அடக்கம் செய்கின்றோம். இது ஒரு சமூகப் பிரச்சனையாகவும், மனித நேய செயலாகவும் பார்க்கப்படுகிறது.
அனாதை பிணங்களில் மனநலம் பாதித்தவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், விபத்தில், இயற்கைப் பேரழிவுகளில் சிக்கியவர்கள் போன்றோர் அனாதைகளாக இறக்கும் நிலை ஏற்படுகிறது.பெயர் , விலாசம், அடையாளம் தெரியாத அல்லது உறவினர்கள் இல்லாத உடல்களை, அரசு மருத்துவமனைகள் அல்லது காவல் துறையினர் கையாளுகின்றனர். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களுக்கு உரிய மரியாதையைச் செய்வது மனிதநேயத்தின் அடையாளமாக பார்க்கின்றோம்.
இது போன்ற சேவைகள், சமூகத்தில் நிலவும் ஆதரவற்ற நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்றார். திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சைவராஜ்,பாரதி, தாமோதரன், தர்ஷித்,மல்லிகா, கவிப்பிரியா, சொர்ணம், சுகந்தி, அபிஷா, பாலு, முரளிதரன், அன்வர், சத்யநாராயணன்,குமார், பன்னீர்செல்வம் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 Comments