திருச்சிநாணயவியல் கழகம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா தென்னூர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. திருச்சி நாணயவியல் கழகத்தலைவர் சார்லஸ் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசுகையில்...திருச்சி நாணயவியல் கழகம்,நாணயவியல் (Numismatics), பணத்தாள்கள் சேகரித்தல் மற்றும் வரலாறு குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது.பழங்கால நாணயங்கள்,பணத்தாள்கள் மற்றும் பழங்கால பொருட்கள் சேகரிப்பை எடுத்துரைக்கிறது.
நாணயவியல் சங்க செயல்பாடுகளில் கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடத்துதல், வரலாற்று ஆய்வு நூல்களை வெளியிடுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.அவ்வகையில் சங்க ஆலோசகர் புழங்கு பொருட்கள் சேகரிப்பாளர் சமூக செயற்பாட்டாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூலானது நவநாகரீக உலகில் அறிவியல் வளர்ச்சியாலும், தொழில் நுட்பப் புரட்சியினாலும் புழங்கு பொருட்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றன அவ்வகையில் பாரம்பரிய புழங்கு பொருட்களை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாக இந்நூல் கொண்டுள்ளது பாராட்டுக்குரியது.
என்றார். நூலாசிரியர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார் பேசுகையில்,புழங்கு பொருட்கள் என்பவை மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும், வழக்கத்தில் இருக்கும் பொருள்கள்; இவை வெறும் உபயோகப் பொருள்கள் மட்டுமல்லாமல், அவற்றோடு மக்களின் உணர்வுகள், பண்பாடு, வாழ்வியல் முறைகள் பின்னிப் பிணைந்திருக்கும். அவை இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள் உதாரணமாக, மண் பானைகள், அம்மி, ஆட்டுரல், உரல், உலக்கை,திருக்கை உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருள்கள், விவசாயக் கருவிகள் போன்றவையாகும், இவை ஒரு காலத்தின் பண்பாட்டையும், மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிப்பவை ஆகும்.
புழங்கு பொருட்கள்பண்பாட்டு அடையாளம்: ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்வியல் முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவுகின்றன
அம்மி, குழவி, பானைகள், தட்டுகள், விளக்குகள், வேளாண் கருவிகளில்ஏர், கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் பண்டைய காலப் பொருட்களில் மண் பாண்டங்கள், மூங்கில் கூடைகளிலிருந்து மண், இரும்பு, செம்பு, பித்தளை, வெண்கலம் என உலோக காலங்களில் வெளிவந்த புழங்கு பொருட்களை சேகரித்து வைத்துள்ளதை நூலாக வெளியிட்டுள்ளேன்.புழங்கு பொருள்கள் மக்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் பிறப்பு முதல் இறப்பு வரை கலந்திருக்கும், அப்பொருட்கள் அவர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் இன்றியமையாத பொருட்கள் ஆகும் என்றார். நாணயங்கள் சேகரிப்பாளர்கள் நாசர், மகராஜன், கரூர் ராஜீ,பாண்டியன், முகமது சுபேர், குணசேகரன், கமலக்கண்ணன், சிவக்குமார், தனராஜ், இளம்வழுதி, தஞ்சை காசிநாத், சக்திவேல், லட்சுமி நாராயணன், ராஜ்குமார், காமராஜ், கார்த்தி,முகமது சித்திக்,அன்பழக பாண்டியன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 Comments