திருச்சி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில்ஷதநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
நிறுவனர் நாசர், துணைத்தலைவர் காசிநாத், பொருளாளர் தாமோதரன், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தலைவர் லால்குடி விஜயகுமார் தநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில்,TANAPEX 2025 தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தால் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2025 வரை சென்னையில் தபால் தலை சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக மாநில அளவிலான தபால் தலை கண்காட்சி நடத்தப்பட்டது.முதன்முறையாக, இந்திய அஞ்சல் துறை மெய்நிகர் ரியாலிட்டி சிறப்பு அஞ்சல் உறையை அறிமுகப்படுத்தியது, அஞ்சல் உறையில் க்யூஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது
க்யூஆர் கோடினை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் தநாபெக்ஸ் 2025 கண்காட்சியையும் அதன் நினைவுப் பொருட்களையும் தொலைதூரத்தில் இருந்து பார்க்க இயலும். மேலும் நேரடி பார்வையாளர்களைத் தாண்டியும் சென்றடையும். இது பாரம்பரிய தபால் தலை சேகரிப்பு மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் கலவையைக் குறிக்கிறது. TANAPEX 2025 மெய்நிகர் ரியாலிட்டி சிறப்பு அஞ்சல் உறை
முத்திரை சேகரிப்பில் டிஜிட்டல் பரிணாமத்தை குறிக்கிறது.சிறப்பு அஞ்சல் உறையில் தமிழ்நாட்டின் மாநிலப் பறவையான மரகதப் புறா உலோகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சிவகுமார், விப்ரா ஸ்ரீ , இளம்வழுதி, முத்துராம் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


0 Comments