திருச்சி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் இலங்கை அஞ்சல் துறை வெளியிட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினப் பெருவிழா நினைவார்த்த அஞ்சல் உறை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார்.
நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் பேசுகையில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை அரசின் விசேட முதல்நாள் தபாலுறை வெளியீட்டு விழா இலங்கையில் அமைந்துள்ள சாயி மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
சாய் மத்திய நிலையத்தின் வேண்டு கோளுக்கிணங்கவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் பரிந்துரைக்கமையவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனையின் பிரகாரம், இந்த விசேட முதல்நாள் தபாலுறை வெளியிடப்பட்டது.





0 Comments