// NEWS UPDATE *** "வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஜன.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு" - தேர்தல் ஆணையம் *** திருச்சியில் ஜீவ சக்தி ஹவுசிங் மல்டி ஸ்டேட் கார்ப்பரேட் சொசைட்டி லிமிடெட் கிளை திறப்பு விழா!

திருச்சியில் ஜீவ சக்தி ஹவுசிங் மல்டி ஸ்டேட் கார்ப்பரேட் சொசைட்டி லிமிடெட் கிளை திறப்பு விழா!

ஜீவ சக்தி ஹவுசிங் மல்டி ஸ்டேட் கார்ப்பரேட் சொசைட்டி லிமிடெட் நிறுவனத்தின் புதிய கிளை அலுவலகம் திறப்பு விழா, திருச்சி உறையூர் புத்தூர் ஹை ரோடு, அருணா தியேட்டர் எதிர்ப்புறம்  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் செல்வராஜ் மற்றும் மாவட்ட முன்னணி மேலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி லட்சுமி நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து மாநில தலைவர் டாக்டர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,..பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக பட்டி, தொட்டி எங்கும்  இருக்கக்கூடிய கிராம மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக திருச்சியில் புதிதாக இந்த கிளை திறக்கப்பட்டுள்ளது. 


பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த சொசைட்டி திருச்சியில் தொடங்கியுள்ளோம். இதனால் புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் மற்றும் இடம் இல்லாதவர்கள், அதேபோன்று வீடு கட்டுமான பொருட்கள் தேவைப்படுபவர்கள், எங்களது சொசைட்டியை அணுகினால் அனைத்தும் மானிய விலையில் மத்திய அரசின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு சிறப்பாக செய்து தருவோம். இதனால் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. 

மேலும் முற்றிலும் மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா  தலைமையின் கீழ் எங்களது சொசைட்டி இயங்கி வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். எங்கள் சொசைட்டியினால் பயன் அடைந்தவர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய சொசைட்டியை திறந்து ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது திருச்சியில் தொடங்கியுள்ளோம். மக்களுக்கு எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரடியாக எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களுடைய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் செய்து தருவார்கள் என்றார்.

Post a Comment

0 Comments