திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் படைகலன் தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் 1991 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் ஒன்று கூடிய முன்னாள் மாணவ மாணவிகள் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று அமர்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தொடர்ந்து மத்திய படைகள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள சீனியர் ஸ்டாப் கிளப்பில் நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவ மாணவிகள் பொன்னாடைகள் அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனர்.









0 Comments