திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளரை பணம் கேட்டு மண்டையை உடைத்த காங்கிரஸ் கட்சி கோட்ட தலைவர் - நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு.
திருச்சி மாநகர காங்கிரஸ் நிர்வாகிகளை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடும் காங்கிரஸ் கட்சி கோட்டத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர் மாவட்ட தலைவர் தயங்குவதாக வேதனை.
காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட பொதுச்செயலாளராக இருப்பவர் அர்ஜுன். இவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தில்லைநகர் கோட்ட தலைவராக செயல்பட்டு வரும் ஸ்ரீ ராகவேந்திரா என்பவர் தன்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்வதாகவும் பணம் தர மறுக்கும் பட்சத்தில் என்னுடைய குடும்பத்தினர் குறித்து தொலைபேசியில் தவறாக பேசுவது என தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு விருந்தினரை வரவேற்க வெளியே நின்ற போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீ ராகவேந்திரா என்பவர் ஆயுதங்களால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கூறிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி நான் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டேன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டு உள்ளது. காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து ஸ்ரீ ராகவேந்திரா என்பவர் மூலமாக எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்னை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் அர்ஜுன் கூறும் போது..,





0 Comments