திருச்சி பத்திரிகையாளர் சங்கத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் அம்பலத்தரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ...தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை அனைத்து மாவட்டங்களிலும் முத்தரையர் சமூகம் வசித்து வருகின்றனர் .சுதந்திரத்திற்கு பின்னர் பொருளாதார ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ முத்தரையர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் 50 சட்டமன்றத் தொகுதிகளில் முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆகவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 15 தொகுதிகளில் முத்தரையர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களில் முத்தரையர் தொகுதிகளில் வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துக்கு 6 தொகுதிகளில் போட்டியிட தென் மாவட்டங்களில் இரண்டு தொகுதிகள் தங்கள் கூட்டணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும், அதே போன்று முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ள டெல்டா மாவட்டங்களில் முத்தரையர் மகளிர்க்கு வாய்ப்பு அளித்திட வேண்டும். பள்ளி கல்லூரி வரலாற்று பாடல்களில் சேர சோழ பாண்டிய வரலாற்றை போன்று முத்தரையர் வரலாற்றை பாடமாக சேர்த்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்கனவே தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கியுள்ளோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழக வெற்றி கழகத்துடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளித்தால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படும் என கூறினார். பேட்டியின் போது மாநில துணைத் தலைவர் மனோகரன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் பொய்யாமணி, சேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


0 Comments