// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் தொழில் துறை வல்லுனர்களை இணைக்க திட்டம் பாஜக தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு அறிவிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் தொழில் துறை வல்லுனர்களை இணைக்க திட்டம் பாஜக தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு அறிவிப்பு

தமிழ்நாடு டயலாக்ஸ் 2026 மற்றும் தமிழ்நாடு பாஜக தொழில் துறை வல்லுநர் பிரிவு சார்பில் ‘தொழில்முறை இணைப்பு 2026’ என்றத் தலைப்பில், பாரதம் அடுத்த பத்தாண்டுகளில் கொள்கை மூலம் வளம் என்ற பொருளில் தொழில் வல்லுநர்கள் சந்திப்பு தேசியக் கருத்தரங்கம் திருவரங்கம் ஆண்டவன் கல்லூரியில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநில மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், சட்ட நிபுணர்கள், பொருளாதார அறிஞர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழில் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.தொழில் துறை வல்லுநர் பிரிவு திருச்சி மாவட்டத் தலைவர் பி.சரவணன் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஆடிட்டர் எஸ்.சுந்தர் ராமன் தொடக்க உரையாற்றி பேசும் பொழுது அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் தொழில்துறை வல்லுநர்களை இணைக்கும் விரிவான செயல்திட்டத்தை அறிவித்தார்.மேலும் தொழில்துறை வல்லுநர்கள் இடையே கொள்கை அறிவு மற்றும் பொது விழிப்புணர்வை வளர்க்க முக்கிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும் ஜிஎஸ்டி 2.0 குறித்த விரிவான கையேடு,பல்வேறு துறைகளில் உள்ள வல்லுநர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பட்ஜெட் காலத்தில்  கருத்துகள் நிதித்துறைக்கு அனுப்பபட்டது. பட்ஜெட் 2026 குறித்து பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் விரிவான விளக்க நூல் வெளியிட்டு உள்ளோம் என்று பேசினார்.


நிகழ்ச்சியில் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.ராகவன் பேசும் போது..பாஜக அரசியல் கட்சி இல்லை. இதன் கொள்கை, சிந்தாந்தம், தேசிய சிந்தனை அனைத்து மட்டத்துக்கும் செல்ல பல பிரிவுகள் உள்ளது. தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம் தான் இருக்கும் என்று பேசினார்..தமிழக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசும்போது...வாக்கு வங்கி அரசியல்வாதிகளிடம் தார்மீகம், மதிப்புகள், கொள்கைகள் என எதுவும் இல்லை.மோடியின் தொலைநோக்கு பார்வையால், திட்டங்களால் உலக பொருளாதாரத்தில் இந்தியா 4வது இடத்துக்கு வளர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட் அனைத்து மக்களின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.நிகழ்ச்சியில் பாஜக மாநில இணை ஒருங்கிணைப்பாளர்நாச்சியப்பன் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள்.வரலாற்றாளர் கிருஷ்ணன் இலக்கியம், கலை, சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கோயில்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.நடிகையும் சமூக ஆர்வலமான கஸ்தூரி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசு தமிழா பேசு நிறுவனர் ராஜவேல் நாகராஜன் மற்றும் பட்டய கணக்காளர் ஷ்ரவண தீபன் ஆகியோர் ஊடகத்துறையில் தரத்தின் வீழ்ச்சி, அரசியல் அழுத்தங்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசினார்கள். மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கல்வியறிவு பெற்றவர்கள் ஜனநாயகத்தில் செயற்பாட்டாகளாக மாற வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வுடன் வாக்களித்தல் மற்றும் சமூக பங்கேற்பின் அவசியம் குறித்து பேசினார்.


எழுத்தாளர் மற்றும் விஞ்ஞானி ஆனந்த ரங்கநாதன் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சிந்தனை கட்டமைப்பது குறித்து பேசினார். மூத்த பத்திரிக்கையாளர் கொலஹலா ஸ்ரீநிவாஸ், ஜெனரல் நரவனே எழுதிய சமீபத்திய புத்தகத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளை உண்மை ஆதாரங்களுடன்  விளக்கினார்.




நிகழ்ச்சியின் நிறைவாக மத்திய பட்ஜெட் 2026 குறித்து விரிவான பகுப்பாய்வு நடைபெற்றது புகழ்பெற்ற பட்டய கணக்காளர் மற்றும் கல்லூரி செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வை சாய் முகுந்தன் வழிநடத்தினார். இதில் அசோக் சுந்தரேசன், ஜெய்ஸ்ரீ ராஜு ஸ்ரீராம், அருண் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவர்கள் நேரடியாக கலந்து கொண்டு கேள்விகள் எழுப்பினர்.சிறந்த கேள்விகளுக்கு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பாஜக திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வர்ன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments