நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில பொருளாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கிருஷ்ணசாமி தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி காவிரி அருகே அமைந்துள்ள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு பம்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று முழுமையாக பழுதடைந்துள்ளது. மற்றொன்றும் முழு நேரம் இயங்காமல் 12 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இதனால் சாக்கடை கழிவு நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல், நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இது பொது மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும், காவிரி ஆற்றின் தூய்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.




0 Comments