திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராஜசேகரன் போட்டியிடுகிறார்.
இவர் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக திறந்த வெளி வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டவுன் ஸ்டேஷன் ரோடு, ஜான் தோப்பு , ராஜீவ் காந்தி நகர், மூவேந்தர் நகர் , கீழ தேவதானம் , சஞ்சீவி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்கள் பொது மக்களுடைய கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.





0 Comments