// NEWS UPDATE *** "எடப்பாடி பழனிசாமி எதிர்காலத்தில் ஆளுநராக வேண்டுமானால் ஆகலாம்" - கனிமொழி பிரச்சாரம் *** அ.இ.பு.த.ம.மு.க திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் நந்தகுமார் வேட்புமனு தாக்கல்!

அ.இ.பு.த.ம.மு.க திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் நந்தகுமார் வேட்புமனு தாக்கல்!

 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நந்தகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக திருச்சி கே.கே.நகர் பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனம் மற்றும் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக வந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் - 2 அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டல தேர்தல் பொறுப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள்,  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


அதனை தொடர்ந்து வேட்பாளர் நந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...நான் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் நல்லாசியுடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தற்போது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னை  சசிகலா வேட்பாளராக அறிவித்துள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் திருச்சி கிழக்கு தொகுதியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. 


பர்மா பஜார் வியாபாரிகள் இன்றைக்கு வாழ்வாதாரம் இழந்து நடு ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதே போன்று நடிகர் விஜய் சினிமா செல்வாக்கை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்து இங்கு போட்டியிடுகிறார். இவர்கள் இரண்டு பேருமே வெளியூரை சேர்ந்தவர்கள்.


நான் இந்த மண்ணின் மைந்தர். என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த தொகுதி மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருந்து பணியாற்றுவேன். தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேர்தல் களத்துக்கு வந்துள்ளேன். சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ் நல்லாசியுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன்.என்னுடைய வெற்றி மக்களின் வெற்றி என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments