// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** பெயர் விலாசம் தெரியாத நபர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

பெயர் விலாசம் தெரியாத நபர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை சாலை பிச்சை நகர் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து உள்ளார். தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய  காவலர்கள் சம்பவம் இடம் சென்று விசாரிக்கையில், சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்துள்ளார் இறந்து போன நபருக்கு உடல்நிலை குறைவு காரணமாகவும் வயது முதிர்வு காரணமாகவும் மயக்கம் ஏற்பட்டு இறந்துள்ளார். மேற்படி நபருக்கு உறவினர்கள் என்ற முறையில் யாரும் இல்லாததாலும், உடலை யாரும் உரிமை கோரவில்லை.

நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக, ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் காந்தி மார்க்கெட் காவல்நிலைய  இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

Post a Comment

0 Comments