// NEWS UPDATE *** கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து - -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு *** திருச்சி மேற்கு தொகுதியில் அமமுக தேர்தல் பணிமனை திறப்பு

திருச்சி மேற்கு தொகுதியில் அமமுக தேர்தல் பணிமனை திறப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா தில்லைநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் வேட்பாளர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு, தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தனர். 

அதனை தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 


இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments