// NEWS UPDATE *** கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து - -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு *** திருச்சி உறையூர் பகுதியில், அமமுக மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்.

திருச்சி உறையூர் பகுதியில், அமமுக மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் அமமுக வேட்பாளராக ராஜசேகரன் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு கடந்த 02 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த ராஜசேகரன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர் பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.




உறையூர் பகுதிக்கு உட்பட்ட அரவானூர், பாண்டமங்கலம், புதூர் 4 ரோடு , ராமலிங்கம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் நின்றவாறு, தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


இந்த பிரச்சாரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments