// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கோரிக்கை.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கோரிக்கை.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். 

தமிழக முதலமைச்சர் விஜய் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் இது வரவேற்கத்தக்கது. அதன்படி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் காந்தி மார்க்கெட் அருகில் தஞ்சாவூர் சாலையில் சீயோன் தேவாலயம் அருகில் பெரிய கடை வீதி கமான் வளைவு, பேகம் பள்ளிவாசல் அருகில் கீழரண் சாலை, வாழைக்காய் வண்டி, எதிரில் மதுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள் ஆகவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

Post a Comment

0 Comments