// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி GVN மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சைக்கான MedBot RoBot ரோபோட் அறிமுக நிகழ்ச்சி - ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்பு

திருச்சி GVN மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சைக்கான MedBot RoBot ரோபோட் அறிமுக நிகழ்ச்சி - ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்பு

திருச்சி விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் அதிநவீன சிகிச்சைக்கான MedBot RoBot அறிமுக நிகழ்ச்சி திருச்சி பஞ்சப்பூரில் உள்ள கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மருத்துவ ஆணையம் தலைவர் மருத்துவர் அபிஜாத் சந்திரகாந்த்சேத், ஜெம் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பழனிவேலு, இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவரும் ஆயிஷா மருத்துவமனை மருத்துவர் அஷ்ரப், சென்னை எஸ் ஆர் எம் மருத்துவமனை மருத்துவர் போஸ், மதுரை சுமோ மருத்துவமனை மருத்துவர் மருது பாண்டியன், திருச்சி சானாவாஸ் மருத்துவமனை மருத்துவர் சமீர்பாஷா, கோயமுத்தூர் பி.ஜி.ஹாஸ்பிடல் மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.


இயக்குனர் கோவிந்தராஜ் தனது உரையில் ஜீவிஎன் மருத்துவக் குழுமம் துவங்கி சுமார் 88 வருடங்களை கடந்துள்ளது. தமிழகத்தில் முதலாவது கேன்சர் நடமாடும் பேருந்து மூலமாக தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலங்களும் சுமார் 38 ஆயிரம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்று அறக்கட்டளைகள் துவக்கப்பட்டு அதன் மூலமாக ஏராளமான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.தொடர்ந்து புதிய MedBot RoBot அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிகழ்வில் பல்வேறு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் திரளாக பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments