// NEWS UPDATE *** தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவு கடிதத்தை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. *** திருச்சி ஜி.வி.என் மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை அறிமுகம்

திருச்சி ஜி.வி.என் மருத்துவமனையில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை அறிமுகம்


திருச்சி டாக்டர் ஜிவிஎன் விஸ்வநாதன் மருத்துவமனையில்  அறிமுகப்படுத்தியுள்ள அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதில் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருச்சி டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் அதிநவீன MedBot RoBot அறுவை சிகிச்சையை அறிமுகபடுத்துகிறது.குறைந்த காயப்படுத்தும் அறுவை சிகிச்சையும் முறையில் முன்னேற்றத்தில் முக்கிய  மையில் கல்லாக அமைந்துள்ளது. இந்த அதிநவீன மருத்துவ தொழில் நுட்பத்தை தமிழக மக்கள் கொண்டு சேர்ப்பதில் தனது அர்ப்பணிப்பை ஜீ.வி.என் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது. 

சிக்கலான அறுவை சிகிச்சைகளை அதிக துல்லியமாகவும் மற்றும்  மிகவும் கட்டுப்பாடுகள் செய்வதற்கு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவும் வகையில் இந்த ரோபோ வடிவப்பட்டு நான்கு கைகளைக் கொண்ட அதிநவீன ரோபோட் தளமாகும். இந்த ரோபட்டிக் அமைப்பு அறுவை சிகிச்சை மற்றும் கைகளில் இயக்கங்களை மிகச் சிறிய வெட்டுக்களுடன் மிக துல்லியமாக பிரதிபலிக்கிறது.  இதன் மூலம் குறைந்த காயப்படுத்தும் அறுவை சிகிச்சைகளை அதிக துல்லியமாக பாதுகாப்பு மற்றும் சிறந்த சிகிச்சைகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.


ரொபேட்டிக் அமைப்பின் முக்கிய அம்சங்களாக 360 டிகிரி சுழற்சி இயக்கம் தன்மையும், உயர்வளான 3D பார்வையும், அதிர்வு வடிக்கட்டுதல் தொழில்நுட்பம் மேலும், துல்லியமாக திசுக்களை பிரித்தெடுத்தல் ஒவ்வொரு அசைவையும் அறுவை சிகிச்சைகளால் மட்டுமே கட்டுப்படுத்தும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படும் வகையிலும், மேலும் வெளி இடத்தில் இருந்து அறுவை சிகிச்சை செய்ய வகைகள் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மருத்துவர்கள் ENT ஜவகர்நாகசுந்தரம், கதிர்வீச்சு அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் முத்துராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments