2026 ம் ஆண்டில் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைந்திருக்கும் புதிய அரசிற்க்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனைவருக்கும் மாற்றம் அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிர் சிறப்பு பாதுகாப்பு படை, கல்லூரி, பள்ளி, வழிபாட்டு தளங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை அகற்றி நடவடிக்கை போதை பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை உத்தரவுகளை பிறப்பித்தும் மற்றும் தமிழக அரசு ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் இயங்கும் அமைச்சர் மற்றும் சட்டமன்ற கட்சியினர் தலையீடுகள் இல்லாமல் நேர்மையான முறையில் அரசு இயங்கும் என்று உத்தரவாதம் அளித்து செயல்பட்டு வரும் தழிழக முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை 1000 ஆயிரம் ரூபாய்யை உயர்த்தி 2500 ரூபாய் தாங்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது எனினும் இந்த மகளிர் உரிமை தொகையானதை முறைபடுத்தி உண்மையான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க மாற்றம் அமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம் மகளிர் உதிவித்தொகையினை முறைபடுத்த சில ஆலோசனைகள்
1) சொந்த வீடு சொத்துக்கள் உள்ள நபர்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும்
2) குடும்பத்தில் கணவரே மகனோ மகளோ அரசு பணியில் இருந்தால் வழங்க கூடாது
3) குடும்பத்தில் உள்ள நபர்கள் வருமான வரி கட்டும்பட்சத்தில் அவர்களுக்கு வழங்க கூடாது
4) ஓய்வூதியம் பெரும் குடும்பத்தினருக்கு வழங்க கூடாது
5) கார் மற்றும் இதர சொகுசு வாகனம் வைத்திருப்பவர்களுக்கு வழங்க கூடாது
தற்போது வழங்கபடும் மகளிர் உதவி தொகை பயனாளிகளை ஆய்வு செய்து முறை படுத்தினால் தகுதி உள்ள மகளிர்க்கு உதவி தொகை கிடைப்பதுடன் அரசுக்கும் பலன் தரும் ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். ஏ. தாமஸ் மற்றும் நிர்வாகிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

0 Comments