// NEWS UPDATE *** த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் *** நீதிக்கட்சியின் வைர தூண் சர் ஏ டி பன்னீர்செல்வம் சிலைக்கு அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனர் திருமலை ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

நீதிக்கட்சியின் வைர தூண் சர் ஏ டி பன்னீர்செல்வம் சிலைக்கு அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனர் திருமலை ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

 நீதிக்கட்சியின் வைர தூண் என்று அழைக்கப்படும் சர் ஏ டி பன்னீர்செல்வம் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனர் திருமலை ரவி தலைமை தாங்கி பன்னீர்செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ஆனந்தன், மாநில நிர்வாகிகள் ஸ்டாலின், தங்கத்துரை, தமிழ்நாடு பார்க்கவ குல பேரவை தலைவர் வழக்கறிஞர் ரமேஷ்,

தமிழ்க்குடி அறக்கட்டளை தலைவர் ராமகிருஷ்ணன், தென்னாட்டு பார்க்கவ குல சங்கம் ரூசோ பேரவை நிர்வாகி கஸ்பார்க மாநில வர்த்தக அணி செயலாளர் ஜஸ்டின், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ரமேஷ், திருச்சி மாவட்ட மாணவரணி தலைவர் நித்திஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பிறகு திருமலை ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது




2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும் அதன் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் க்கும் அகில பாரத பார்க்கவ குல சங்கம் எபிபிஎஸ் ன் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த சட்டமன்றத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி வகிக்கும் நிலையில் பார்க்கவ குல சமுதாயத்தின் பங்களிப்பு இல்லாத சூழலில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் அல்லது காலியாக உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் பார்க்கவ குல உடையார் 

பார்க்கவ குல மூப்பனார்  பார்க்கவ குல நயினார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைத்து இந்த அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கேட்டுக் கொள்கிறேன் 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து உத்தரவிட வேண்டும் 

லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மால்வாய் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமிபாலகன் பிடாரி அம்மன் கருப்பண்ணசாமி கோயிலை அறநிலைத்துறையினர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். எனவே அந்த கோயிலை மீட்டு எங்கள் சமுதாய மக்களிடம் வழங்க வேண்டும் 

டெல்டா மாவட்டங்களில் போதிய கல்லூரிகள் விளையாட்டு மைதானங்கள் இல்லாத நிலையில் அந்த உள்கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்துடன் செய்து தர வேண்டும்.

வறட்சி பகுதிகளான இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கொண்டு வந்து அந்த பகுதியில் உள்ள இருபால் இளைஞர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் இவ்வாறு திருமலை ரவி கூறினார்.






Post a Comment

0 Comments